இங்கு தேடுக

Thursday, October 14, 2010

நான் இறந்துதான் போயிருந்தேன்


தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!

7 comments:

 1. விவசாயினுடைய நிலை வரிகளில்..
  வலியும் மிகுதியாய்..
  வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 2. Frnd, Pls remove word verification..

  ReplyDelete
 3. வைகையோ வறண்டுபோச்சு,

  காவிரியும் கானலாச்சு

  வான்மழையும் பொய்யாய்ப்போச்சு

  வயல்நிலமும் வெடிச்சுப்போச்சு...

  உழுது நீரணைத்து,

  உரமிட்டு வளர்த்தவரும்

  உயிரை விட்டாரென்ற

  உறுத்துகிற நிஜம்தகிக்க,

  இற்றுப் போயிருந்தேன்

  இறுதியில்

  நான், இறந்தும் போயிருந்தேன்!


  ஒரு நாற்றுடைய வலியையும் நயமா சொல்லியிருக்கீங்க நவீன். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. Ungal kavithai enudayathai vida sirapaga irukirathu. Ennaku eppadi ithu pol ezhuthuvathu ena solli thara mudiyuma?

  ReplyDelete
 5. வரிகளுக்குள் வலிகள் இருக்கிறது
  இறந்தபோதும் இறக்காமல்...

  அருமையான வெளிப்பாடு..
  தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. Mallika akka, ungalai pola oruvaridam irunthu karuthai peruvathu, pullarikirathu!!!

  ReplyDelete