இங்கு தேடுக

Thursday, October 14, 2010

நான் இறந்துதான் போயிருந்தேன்


தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!

நான் இறந்துதான் போயிருந்தேன்

தமிழ்கவிதை இயற்றி தமிழுணர்வை வளர்க எண்ணினேன்;
நான் இறந்துதான் போயிருந்தேன் என் எண்ணத்தில்,
என் நண்பன் கவிதையை படித்துவிட்டு "SUPER" என்றதால்!

Sunday, October 10, 2010

நீயும் நானும் 2

வார்த்தைகளில் விளையாட உன்போல் கவிஞன் இல்லை நான்;
முகத்தால் மனங்கவர உன்போல் அழகன் இல்லை நான்;
சிரிப்பிலே சிக்கவைக்க உன்போல் சிங்காரன் இல்லை நான்;
ஆனால், நீ பெரும் ஒவ்வொவொரு வெற்றியையும் பார்த்து;
பெருமை கொள்ளும் நண்பன் மட்டுமே நான்!

Thursday, October 7, 2010

நீயும் நானும் 1

ஓர் மரத்தில் வாழ்ந்தாலும் பிரிந்திருக்கிறோம் இருதுருவங்களாய்,
நீயும் நானும்;
நீ துளிர்விடும் இலையாய், நான் உதிர்கால சருகாய்!

வேப்பமரம், ஆதம்பாக்கம்.

Wednesday, October 6, 2010

Azhagu - அழகு

அவள் வாழ்கையை காண, இடது கண் உதவவில்லை,
உதட்டுக்கு வெளியே துருத்தி கொண்டிருக்கும் பற்கள்,
எண்ணையை வருடக்கணக்கில் பார்க்காத முடிகற்றைகள்,
இயற்கையான அவள் அழகை ரசித்தேன்;
அவளோ தன் மழலையை கொஞ்சி கொண்டிருந்தாள்!

வெற்றிடம்

      

    
   

   


   

Monday, October 4, 2010

Penn-Nadhi - பெண்-நதி

நதிகளே உங்களுக்கு ஏன் பெண்களின் பெயர்கள்?  
உங்களுக்கு கண்கள் இருந்தால்,
அவள் கைகளின் ரேகைகளை பாருங்கள்!

------------------------------------------------------------------------

nathigalae ungaluku yaen pengalin peyargal?
ungaluku kangal irunthal,
aval kaigalin regaigalai parungal!